ஷில்லாங்

ன்முகத்தன்மை கொண்ட இந்திய சிந்தனைக்கு எதிராக பொதுச் சிவில் சட்டம் உள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மத்திய அரசு நாடெங்கும் பொதுச் சிவில் சட்டம் கொண்டுவருவதில் கடும் தீவிரத்தைக் காட்டி வருகிறது/   ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம்  தெரிவித்து வருகின்றது/  பிரதமர் மோடி இது குறித்து, ‘நாட்டு நிர்வாகத்தை‘இருவிதமான சட்டங்களால் நாட்டு முடியாது.

மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியமாகும் . சிலர், பொது சிவில் சட்ட விவகாரத்தில் தவறான கருத்துகளைப் பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

நேற்று தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா

“வடகிழக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருக்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது.

பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்தியச் சிந்தனைக்கு எதிரானது. என்றாலும் என்ன மாதிரியான மசோதா தக்கல் செய்யப்பட இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அந்த வரைவின் உண்மையான விஷயங்களைப் பார்க்காமல் அது குறித்த விபரங்களைக் கூறுவது கடினம்”.

என்று கூறி உள்ளார்.