சென்னை:
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு துணிச்சல் இருந்தால் பதவியை துறந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சவால் விடுத்தார்.
கடந்த வாரம் ஓபிஎஸ் வாரணாசி சென்று, மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் தேர்தல் தாமதமானதற்கு சட்டப்போராட்டமே காரணம் என்றவர், சட்டப்போராட்டம் நடத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 4 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, அவர் கனவுலகத்தில் சஞ்சரித்து வருகிறார். அவரது கருத்து நடைமுறைக்கு ஒத்து வராது என்று பதில் அளித்தார்.
வாரணாசி பயணம் குறித்து மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். வாரணாசி சென்றது பாஜகவில் சேரங்ததான் என்ற தங்கத்தமிழ்செல்வன் குற்றச்சாட்டு கூறியுள்ளரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், தான் தர்மயுத்தம் தொடங்கியது முதல் தங்க செல்வனின் எந்தவொரு கேள்விக்க பதில் சொல்வது இல்லை. அவரது கருத்து அடி முட்டாள்தனமான கருத்து என்றார்.
தான் ஒருபோதும் தங்கத்தமிழ் செல்வன் கேள்விக்கு பதில் சொல்வது கிடையாது. அவர் துஷ்டர் அதனால் அவருக்கு பதில் சொல்வது கிடையாது.
அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான கேள்விக்கு, குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் அமமுகவில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய ஆவணங்கள் சபாநாயகரிடம் உள்ளன என்றவர், சட்டம் அனை வருக்கும் தெரியும் என்றவர், ஒருவர் ஒரு கட்சி சார்பில் வெற்றிபெற்று, பின்னர் மற்றொரு கட்சி யில் இணைந்து பணியாற்றினால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்… அதுபோலவே தற்போது நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியவர், துணிச்சல் இருந்தால், அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை துறந்து தேர்தலை சந்தியுங்கள் அல்லது நாங்கள் அமமுகதான் என்றும், நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் அவர்களுக்கு அழகு என்று சவால் விடுத்தார்.
4 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் உள்பட நாங்கள் பிரசாரம் செய்வோம் என்றவர், 4 தொகுதிகளிலும்அதிமுக வெற்றி பெறும் .
இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.