பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவான அவர் திருவனந்தபுரம் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரை திருவனந்தபுரத்திலிருந்து சாலை மார்கமாக சென்னை காவல் ஆணையரகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர் . காலை சரியாக 11.10 க்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மீரா மிதுனை போலீஸார் அழைத்து வந்தனர்.
விசிக பிரமுகர் வன்னி அரசு புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது ஐபிசி பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தை தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலை தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2)(மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராக பேசுவது, நடப்பது) 3(1) r, 3(1)(u), 3(1) (s) of SC/ST prevention act (2வன்கொடுமை தடுப்புச் சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரதமருக்கும், முதல்வருக்கும் என்னை கைது செய்வது கனவில் கூட நடக்காது என்றெல்லாம் சவால் விட்டார் மீரா. பின்னர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவரது செல்போன் எண் மற்றும் வீடியோ பதிவு ஐபி அட்ரஸை சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தபோது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அங்குச் சென்று அவரை கைது செய்தனர்.
கைது செய்த போது அவர் கத்தி, கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அதையும் வீடியோ எடுத்து பதிவிட்டார், இதற்கெல்லாம் மசியாத போலீஸார் அவரை கைது செய்து ஆலப்புழா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வெளிமாநிலம் என்பதால் டிரான்சிட் வாரண்ட் பெற்றப்பின் நேற்றிரவு அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஜாமீன் கிடைக்காத பிரிவு ஆகும். எப்படியும் கீழமை நீதிமன்றத்தில் கிடைக்காத ஜாமீன் செசன்ஸ் நீதிமன்றத்தில் தான் கிடைக்கும். அதனால் அவர் மாதக்கணக்கில் சிறையில் இருக்க வாய்ப்புண்டு என்கிறது போலீஸ் தரப்பு.
இந்நிலையில் மீரா மிதுனின் காதலரான கலர் கோழி குஞ்சி எனப்படும் அபிஷேக் சேமியையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அதே காரில் தான் அவரது காதலர் கலர் கோழியும் இருந்துள்ளார். மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இவரது மிதுனுக்கு ஃபிரென்ட் அபிஷேக் ஷாம்மை கைது செய்துள்ளனர். மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் தற்போது அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.