பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கு முன்பு இருந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். 2016ல் மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற மீரா மிதுன் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார் எனக் கூறி அவரது பட்டம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது.
சமீபகாலமாக மீரா மிதுன் பல்வேறு பிரபலங்கள் பற்றி ட்விட்டரில் பல்வேறு வகையில் புகார் தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை த்ரிஷா அவருடைய தோற்றத்தை காப்பி அடிப்பதாக மீரா மிதுன் தெரிவித்திருந்தார்.எச்சரிக்கையும் விடுத்திருந்தார் .
https://twitter.com/meera_mitun/status/1286761808640892928
இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தாக்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மீரா மிதுன். “தெலுங்கு பெண் தமிழ் என சொல்லி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் நார்மலான பக்கத்து வீட்டு பெண் போல நடித்து அனைவரிடமும் தான் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர் என்ன சிம்பதி உருவாக்குகிறார். அனைத்து தமிழர்களையும் அவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு Nepotism product தான். ஏமாற்றுவதற்கு என்ன ஒரு புதிய டெக்னிக் ஐஸ்வர்யா ராஜேஷ்” என மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]