
பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel