
கடந்த 2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் மீரா ஜாஸ்மின்.
2014ம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக நடிகை மீரா ஜாஸ்மின், தன் உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து இருக்கிறாராம்.
Patrikai.com official YouTube Channel