மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா, வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல், கடந்த ஆண்டை போல், இந்த வருடமும் கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடை இன்றி சித்திரை திருவிழா நடத்த, தமிழக அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டிருந்தது.
சித்திரை திருவிழா நடைபெறாமல் போனால், மதுரையில் உள்ள அழகர் கோவில் போன்ற கோவில்களுக்கும் வரும் வருமானம் பெருமளவில் இழக்க நேரிடும் என்று கோவில் ஊழியர்களுக்கான சங்கம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.