சென்னை,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக அரசு புதிய அறிவிப்புகள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி,  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாக ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில், தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதையடுத்து நேற்று முதல்வர் பழனிச்சாமியுடனும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு எட்டாததால் போராட்டம் தொடர்ந்து. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதால், ஜாக்டோ, ஜியோ போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து. மேலும், கோர்ட்டு கொடுத்த உத்தரவாத்தைத் தொடர்ந்து தலைமை செயலாளர் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டு அரசின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ஊதிய உயர்வு தொடர்பாக, சமீபத்தில் ஊதியக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி இடைக்கால நிவாரணம் குறித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.