சென்னை: சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உண்மையை ஒத்துக்கொண்டார். மருந்து தட்டுப்பாடு என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி வந்த நிலையில், அதை  நேற்றுவரை மறுத்து வந்த அமைச்சர் இன்று மருந்து தட்டுப்பாடு உள்ளது என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக மருத்துவதுறை அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களும் டெங்கு காய்ச்சலை உண்டாக்க கூடிய கொசுக்கள், உங்களது வீடு களில் உற்பத்தியாகாத வண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்போது மருந்து தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் என ஒப்புக்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கடந்த செப்டம்பர் மாதம் மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சிறுநீரக நோய்கள் உள்பல பல நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவது இல்லை என்றும், சுகர் நோயாளி போன்ற நோயாளிகளுக்கு குறைந்த அளவிலேயே மருந்து மாத்திரைகள் சப்ளை செய்யப்படுவதாகவும், நோயாளிகள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் தமிழகஅரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதை தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால், சமூக ஊடங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மை என தகவல்கள் பதவின. இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருந்து தட்டுப்பாடு என்பது தவறான தகவல் என்று எனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறேன். தூய்மைப்பணியாளி நோயாளி ஒருவரை சுத்தம் செய்ய உதவியதை வீடியோ பிடித்து மக்களின் மத்தியில் பகிர்ந்துள்ளனர். இதனால், மக்களின் மத்தியில் அரசு மருத்துவமனையின் மேல் உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. மேலும், மருந்து தட்டுப்பாடு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுந்தால் மதுரையில் உள்ள மருந்து கிடங்கிற்கு சென்று பரிசோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த இரு மாதங்களாக மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களும் நோயாளிகளும் பலமுறை கூறியும், அதை அதை சீரமைக்க முன்வராமல், நேற்றுவரை மறுத்து வந்த அமைச்சர் மா.சு. இன்று வேறுவழியில்லாமல் மருந்து தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளது, அமைச்சர் மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளது.

மாநில அரசும், அமைச்சர்களும் ஏழை மக்களின் வாழ்வில் விளையாடாமல், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில்,நேர்மையுடன் செயல்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! கமல்ஹாசன் கண்டனம்..