ஆலமரம் (ஆல்) Ficus benghalensis (Banyan)

இந்தியாவின் தேசியமரமாக ஆலமரம் விளங்குகிறது.  அதிக நிழல் தரக்கூடிய மரமாகவும் , அகன்று விரிந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலமரம்

ஆலமரத்தின் இலை, பட்டை, பழம், விதை, மொட்டுக்கள் , வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது

ஆலமரத்தின் பழத்தைத் தின்று அதிகமான பறவையினங்கள் வாழ்ந்து வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு அதிகமான பலன்களை கொடுக்கும் மரமாகவும், அதிகமான பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மரமாகவும் ஆலமரம் விளங்குகிறது.

ஆலமர விழுதுகள் பல நூறாண்டு பல தலைமுறைகள் இருக்கும் தன்மை கொண்டது. மேலும் மழை இல்லாக்காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இன்றும் கிராமங்களிலும் சாலைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆலமரம் இருக்கும். பண்டைய காலங்களில் மன்னர்களாலேயே இம்மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தததையும் வரலாற்றில் காணலாம்.

ஆலமர நிழல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும், ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்ற பழமொழியும் உண்டு

இதற்கு தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி,  என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது

மருத்துவ பலன்கள்

1.ஆல மரஇலை மற்றும் வேரை கசாயம் செய்து 48 நாட்கள் குடித்து வந்தால் வலிப்பு நோயை குணப்படுத்தலாம்

2.ஆலம்பட்டையை நீரில் கொதிக்கவைத்து கொப்பளித்து வந்தால்  வாய் நாற்றம், வாய்ப்புண்,  ஈறு களில் புண் நீங்கும்

3.ஆலவிழுதை பொடி செய்து பல்துலக்கிவந்தால் பல் வலி நீங்கும். ஈறுகள் பலப்படும்

4.ஆலமரத்தின் பழத்தினை உண்டு வந்தால் உடல் வலி மற்றும் தசை வலிகள் நீங்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5.ஆலமர வேர், விழுது, மொட்டு போன்றவற்றை கசாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

6.ஆலமர வேர், விழுது, மொட்டு போன்றவற்றை பசைப்பத்தில் ஆக்கி தோல் மேல் தடவி வர தோல் நோய் நீங்கும், மற்றும் கட்டி வீக்கங்கள் குணப்படும், நிரீழிவு நோயாளிக்கு வரும் காயமும் குணமடையும். ஆனால் நீரிழிவு நோயாளாகள் மருத்துவர் கண்காணிப்பில் செய்துவரவேண்டும்

7.பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவற்றிற்க்கு ஆலமரத்தின் வேர்ப் பட்டைகளை இடித்து கொதிக்க வைத்து அருந்தலாம்

8.ஆண்கள் ஆலமரப்பழத்தை உண்டு வந்தால் மேக நோய், வெட்டை, சிறுநீர் எரிச்சல், ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்.ஆல மரப்பழத்தை காய வைத்துப்பொடி செய்து நாட்டுச்சர்க்கரையுடன் உண்டு வந்தால் மூல நோய் குணமடையும்.

9.இலைத்துளிரை அரைத்து மோரில் 4-5 கிராம் வீதம் கலந்து குடித்தால் பேதி நிற்கும்.
10.ஆலமரத்தின் அடியில் இருந்து சுவாசிக்கும்போது சுவாச நோய் வராமல் தடுக்கவும், நியாபக சக்தியை மேம்படுத்தவும், மன உளைச்சல் மற்றும் படபடப்பு நீங்கும். ஆகவே பண்டைய காலங்களில் இருந்து நாம் ஆலமரத்தடியில் படிப்பதும், ஆலோசனைகள் கூட்டங்கள் நடத்துவதும், தியான பயிற்சிகள் செய்யவும், ஆலயங்களில் தல விருட்சமாகவும் ஆலமரம் இருந்தது வந்தது. இது நம் நாட்டுக்கு கிடைத்த சிறப்பாகும்

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS., PhD (Yoga)
அரசு மருத்துவர்
99429-22002
கிருஷ்ணகிரி மாவட்டம்