சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிமீதான சட்டவிரோத பண பரிமாற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை  ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகாக அசோக்குமார் சுமார்  இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்து வந்தார். அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாத நிலையில்,   அவரை கைது செய்ய முடியாமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் திணறினர். தமிழ்நாடு காவல்துறையும் இந்த விஷயத்தில் மவுனம் சாதித்தது.

இந் தநிலையில்,  அசோக்குமார் ஏப்ரல் 9ந்தேதி (2025) அன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று உடனே அவருக்கு நீதிமன்றமும் முன்ஜாமின் வழங்கியது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இநத் நிலையில்,  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட, 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நடந்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இதையடுத்து அசோக்குமார் தரப்பில், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு, 30ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் உள்பட 13மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!