கரிசாலை என்று அழைக்கும் கரிசலாங்கண்ணி , நம்மருகே நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், நிலங்களிம் இருக்கும் ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கற்பமூலிகை ( உடலை பலப்படுத்தும் மூலிகை)
இராமலிங்க வள்ளலார் தன் 6ம் திருமுறையில் கரிசாலையை ஒரு சிறந்த காய கற்ப மூலிகையாக குறிப்பிடுகிறார்
இதன் மற்ற பெயர்கள்: கரிச்சை, கரியசாலை, பிருங்கராஜம்,பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) , கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், கரிக்கை, கையான்
சத்து விபரம்
100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
நன்றி : விக்கிபீிடியா
பயன்கள்
கல்லீரல், மண்ணீரரை பலப்படுத்துவதுடன் செயல்பாட்டினையும் ஒழுங்குப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோயை குணமாக்குகிறது. மதுப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பினை குணப்படுத்துகிறது. அதிக காய்ச்சலினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, மண்ணீரல் வீக்கத்தினையும் சரி செய்கிறது
இரத்த சோகை
கரிசாலையில் அதிகமான இரும்புச்சத்து உள்ளதால் இரத்தத்தினை சுத்தப்படுத்தி செயல்பாட்டினை சீர்படுத்துகிறது அனிமியா என்று இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
வயிறு
குடல் புண், பித்தப்பை கற்கள், குடல் புழுக்கள், பித்தப்பை வீக்கம், மலச்சிக்கல் , வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் கரிசலாங்கண்ணியால் குணமாகும்.
சளி இருமல்
சளி இருமல் உள்ளவர்களுக்கு கரிசாலையை உண்ணக்கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவை குணமடைகிறது. அதிக காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரிசாலை சாற்றைக்கொடுத்தால் காய்ச்சல் குணமாகும், நோய் எதிர்ப்புத்திறனும் கிடைக்கும். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் உடலில் உள்ள தாதுக்கள் பலப்படுத்துவதற்கும் கரிசாலங்கண்ணி உதவும்
கண்
கண் பார்வை தெளிவாகவும், கண்ணொளி பெருகவும் உதவும்.
தலை முடி
தலையில் முடிகொட்டுவது, சொட்டையாவது போன்றவற்றை தடுக்கும், இள நரை வராமல் தடுக்கும்.
தோல்
கரிசாலை சாற்றை இதர மூலிகைகளுடன் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோல் நோய்கள், அறிப்பு, தோல் வெடிப்பு நீங்கும்.
அடுத்த பாகத்தில் நீரிழிவு நோய், சிறு நீர் தொற்று, பெண்களுக்கு வெள்ளைபடுதல், முடி உதிர்வை குறைத்தல், ஆஸ்துமா, பாம்பு கடி, தேல் கடி போன்றவற்றிற்கு தீர்வாக கரிசாலையை எப்படி உண்ணுவது என்று பார்ப்போம்
மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002