சென்னை,

டகங்கள் பரபரப்புக்காக பொய்ச்செய்தியை வெளியிட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கண்டனம் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களை மத்திய மாநில அரசுகள், கடற்படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டு வருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

ஊடக நிறுவனங்கள்  குமரியில் உள்ள உண்மையை நிலையை மறைத்து,   சூடான செய்தியை கொடுக்க வேண்டும் என பொய்யான செய்தியை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இதன் காரணமாக  மீனவர்கள் மத்தியில் மத்திய மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றம் ஏற்படுத்தப்பட்டதாக பொன்.ராதா குற்றம் சாட்டினார்.