சென்னை: கொரோனா பரிசோதனையில் பிழை ஏற்படுத்திய, பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் – கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழகஅரசு கடந்த மே மாதம் 21ந்தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது தவறு திருத்தப்பட்ட நிலையில், தமிழழக சுகாதாரத் துறை பரிசோதனை உரிமம் ரத்தை வாபஸ் பெற்றுள்ளது என மெட்ஆல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 271 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. இதில், தனியார் மையங்கள் 202ம் அரசு மையங்கள் 69ம் உள்ளன. தனியார் மையங்களில் பிலமானது மெட்ஆல் சோதனை மையம். இந்த மையத்தில் ஏராளமானோர் கொரோனா சோதனையான, ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்து வருகின்றனர். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மே மாதம் 3வது வாரத்தில், ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட்ஆல் மேற்காட்டிய 2 நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டி என காட்டி, இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து மெட்ஆல் உரிமத்தை தமிழகஅரசு ரத்து அதிரடியாக ரத்து செய்தது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கள்ளக்குறிச்சியில் உள்ளவர்கள் என மெட் ஆல் -கொரோனா பரிசோதனை நிறுவனம் பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் தருமாறும் மெட் ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசின் விசாரணைக்குழுவும் மெட்ஆல் ரிப்போர்ட்களை ஆய்வு செய்தது. இதில், மெட்ஆல் பணியாளரின் கவனக்குறைவாகவே பிழை ஏற்பட காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐசிஎம்ஆர் தரவுத் தளத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மெட்ஆல் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழகஅரசு உரிமம் ரத்து ஆணையை திரும்பப் பெற்றுள்ளது.