சென்னை: 
சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களும் இறைச்சிக் கடைகள், கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதா? என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே காந்தி ஜெயந்தி, மிலாடி நபி போன்ற முக்கிய நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கடைகள் மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.