சென்னை

மிழக ஆளுந்ர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்ப்பதாக அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் இதில் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.   ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் அறிவித்து இருந்தன.

அவ்வகையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு விளைவித்து வருகிறார் என்றும, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார் எனவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.