சென்னை

ரும் 9 மற்றும் 13 தேதிகலில் பிரதமர் மோடியும் 12 ஆம் தேதி அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

வரும் 18 ஆம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன் காலியாக உள்ள 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அதே தினம் தேர்தல் நடைபெறுகிறது. இதை ஒட்டி தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. அதனால் பிரதமர் மோடி அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்த கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கூட்டணியை ஆதரித்து ஏற்கனவே சென்னை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரம் செய்துள்ளார். தற்போது தமிழகத்தில் தேனி உள்ளிட்ட தொகுதிகளில் வரும் 12 ஆம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்ய  உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதே பகுதிகளில் பிரதமர் மோடியும் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 9 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் மோடி  தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். குறிப்பாக ஆண்டிப்பட்டியில் ராகுல் காந்தி 12 ஆம் தேதியும் மோடி13 ஆம் தேதியும் பிரசாரம் செய்கின்றனர்.