புதுச்சேரி:
எம்டி/எம்ஸ் அட்மிஷனுக்கான ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜிம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்டி/எம்ஸ் படிப்புகளுகான ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, ஏப்ரல் 23-ஆம் தேதியாக நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியை பொறுத்தவரையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அவற்றில் 150 இடங்கள் புதுச்சேரி, 50 இடங்கள் காரைக்கால் ஆகும். இந்த 2020 கல்வியாண்டு முதல் 50 மருத்துவ இடங்கள் கூடுதலாக்கப்பட்டு, 250 சீட் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில், சான்றிதழ் படிப்பு, முதுநிலை அடிப்படை பட்டயப்படிப்பு, பி.ஹெச்டி, இளநிலை, முதுநிலை மருத்துவப்படிப்புகள் உள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஜிப்மருக்கு மிக அவசரமின்றி வர வேண்டாம் என ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் எம்டி/எம்ஸ் அட்மிஷனுக்கான ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வை எழுதுபவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டை வரும் 28-ஆம் தேதிக்கும் பதிலாக மே 6-ஆம் தேதி முதல் www.jipmer.edu.in என்ற இணைய தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.