புதுச்சேரி: 770 மருத்துவ மாணவர்களை வெளியேற்ற எம்சிஐ உத்தரவு!

Must read

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 2016-17 ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 770 மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

புதுச்சேரியில் 7 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள். 3 மருத்துவ கல்லூரிகள்.

இந்த கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் எனப்படும் அமைப்பு மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டும், அதன்படி செயல்படாமல் நிரப்பப்பட்ட  770 மருத்துவ கல்லூரி மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட அந்த மாணவர்கள் தற்போது இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்களை அதிரடியாக வெளியேற்ற உத்தரவிட்டிருப்பது மாணவர்களிடையே பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article