சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கியது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட  உள்ளது. இதில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகள் விவரம் தெரிய வரும்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில்,  மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), 2025 ஆம் ஆண்டுக்கான NEET UG கவுன்சிலிங் அட்டவணையை  வெளியிட்டது. அதன்படி மருத்துவ கலந்தாய்வு ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகியது. முதலில் அகில இந்திய மருத்துவ படிப்புக்கான  ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து, மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்று ஜூலை 30ஆம் தேதி முதல்  தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு, கல்லூரிகளை  மாணவர்கள் தேர்வு செய்த நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு முடிவு இன்று வெளியாகிறது. அதில், மாணவர்களுக்கு எந்த கல்லூரி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது தெரிய வரும்.