சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளாக கலந்தாய்வு சென்னை ஒமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.
இளநிலை மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், அக்டோபர் 19ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதனப்டி, இன்று எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
முதல்நாளான இன்று சிறப்புபிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினரின் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரடியாக நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் முதல் 25-ம் தேதி வரை இணைய வழியில் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. 21 முதல் 27ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணைய வழியில் நடைபெறுகிறது.
யுஜி நீட்2022: இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…