சென்னை
சென்னை மேயர் பிரியா காலை உணவு வழங்க தனியாருக்கு அளிக்கப்பட இருந்த ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கா ன முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி சென்னையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 356 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிரது.
வழக்கமாக இந்த காலை உணவு அம்மா உணவகம் மூலம் வழங்கப்படும் நிலையில்பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்த கோரும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாஜ எதிர்த்தன.
ஆகவே சென்னை மாநகர மேயர் பிரியா தற்போது அந்த ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.