யிலாடுதுறை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே மது பானம் வழங்க மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.   ஆயினும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் இருக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   அதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.    ஆயினும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் அங்கு கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா, “மயிலாடுதுறையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அசல் சான்றிதழ் அல்லது கைப்பேசியில் உள்ள குறும் செய்தியினை காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.