சென்னை: தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர்  அறிவித்திருந்தார். அதன்படி,  கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதியும் பிரிக்கப்பட்டு தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியும், நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையும், சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சட்டமன்ற கூட்டத்தொடரின்போது  சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறை உள்பட பல்வேறு பணிகள்  நடைபெற்று வந்தன.

இந்த நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் காரணமாக,  தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி உள்ளது.

புதிய மாவட்டம் கோரி கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டுகோள் விடுத்து வந்த மயிலாடுதுறை மக்களின்  கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

புதிய மாவட்டத்தில் இணையும் ஊர்கள் விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம்…

மயிலாடுதுறை
பேரளம்
கும்பகோணம்
திருவிடைமருதூர்
திருநாகேஸ்வரம்
ஜெயம்கொண்டம்
அணைக்கரை
பந்தநல்லூர்
மணல்மேடு
வைத்தீஸ்வரன்கோவில்
சீர்காழி
கொள்ளிடம்
பூம்புகார்
தரங்கபாடி
பொறையார்
வேலம் புதுக்குடி
கொல்லுமாங்குடி
ஸ்ரீகண்டபுரம்
எஸ் புதூர்
குத்தாலம்
ஆடுதுறை
செம்பனார்கோவில்
மங்கைநல்லூர்
கோமல்

ஆகிய ஊர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம்பெறுகிறது.