‘ஆக்‌ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சுந்தர்.சி.

இதனிடையே, புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி. இதனை அவருடைய நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பத்ரி இயக்கவுள்ளார்.

இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மாயாபஜார்’ படத்தின் ரீமேக் ஆகும்.

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.