டெல்லி: அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம், என பிரதமர் மோடி, மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அப்துல் கலாமுடன் தனது நெருக்கமான உறவு குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி, மறைந்த ஏவுகனை நாயகன், பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கனவு கண்ட இந்தியாவை, வலிமையான, சுயசார்பு மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்,
இளம் மனங்களைத் தூண்டி, நம் தேசத்தை பெரிய கனவு காணத் தூண்டிய ஒரு தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது வாழ்க்கை வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

அதாவது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நினைவூட்டுகிறது.
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார். அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடி வந்தார்.
இன்று ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.