மும்பையில் உள்ள செவ்ரி காசநோய் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷா ஜாதவ், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

“அநேகமாக இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கும், உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், உடல் அழியும் ஆனால் ஆன்மா அழியாது” என்று தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த மனிஷா கடந்த ஞாயிறன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை போட்ட 36 மணி நேரத்தில் அவர் இறந்தது மருத்துவர்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மும்பையில் இதுவரை நிறைய மருத்துவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்த போதும், இந்த மருத்துவமனையில் உயிரிழந்திருக்கும் ஒரே மருத்துவர் இவரே.

[youtube-feed feed=1]