உலகெங்கும் 10 நாடுகளில் உள்ள 1571 முக்கிய பிரபலங்களின் மொபைல் தரவுகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 40 க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளின் தரவுகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளது இந்த பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான திருமுருகன் காந்தியின் மொபைல் போன் தரவுகளும் வேவுபார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.