சென்னை:
தற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது என்றும், பிப்ரவரி 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. 490 பேரூரட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன.

மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி துவக்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதிகபட்சமாக பாதுகாப்பு வழங்கப்படும்; நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்காணிப்பு செய்யப்படும்.

சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பேரணி பிரசாரத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும். ஜனவரி 31 வரை பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.