பெய்ஜிங்கிள் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சாய்வுநடை பனிச்சறுக்கு பிரிவில் தங்கம் வென்ற கனடா நாட்டின் பனிச்சறுக்கு வீரர் மேக்ஸ் பேரட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்ற விவரம் தெரியவந்திருக்கிறது.

2018 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேக்ஸ் பேரட் இந்த வார துவக்கத்தில் நடைபெற்ற சாய்வுநடை பனிச்சறுக்கு போட்டியில் தங்கம் வென்றார்.

இவர் 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து பலமுறை கீமோதெரபி மேற்கொண்டார்.

இதனால் அவரது தேகம் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆனதுடன் விளையாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது, தொடர் சிகிச்சைக்குப் பின் உடல் நிலை தெரியவர் மீண்டும் தனது பயிற்சியைத் துவங்கினார்.

தற்போது பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ள பேரட் இலக்கை அடைவதற்கு நோய் ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாகவும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.