சென்னை:
ணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது.

10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதற்கு முன்கூட்டியே வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. திருவண்ணமலை மாவட்டம் போளூர், வந்தவாசி ஆகிய இடங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வாயிலாக வினாத்தாள்கள் கசிந்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான கணித பாட வினாத்தாளும் கசிந்துள்ளது.

2-ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு இரண்டு வெவ்வேறு வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும் என்றும், ஏதேனும் ஒன்று கசிந்தால் மற்றொன்றைக் கொண்டு தேர்வு நடைபெறும் என்றும் கல்வித்துறை உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில், இன்று 12-ம் வகுப்பு கணித பாட தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்காக தயார் செய்யப்பட்டிருந்த 2 வகையான வினாத்தாள்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. இந்த நிலையில், புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று கணித பாட தேர்வு நடத்தப்படுகிறது.