ராமநாதபுரம்:
ய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்குகிறது.

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்- அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல்கட்டமாக ராமநாதபுரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேருக்கு ராமநாதபுரத்தில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக வழிகாட்டுதல் நெறி முறைகள் குறித்த வகுப்பு நடத்தப்பட்டது. இன்று காலை முதல் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளது.