சென்னை:
மிழகத்தில்  அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தனித்தனியே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதே வரிசையில் மதிமுகவும் தங்களது கட்சி மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட மதிமுகம் என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கி உள்ளது.
தற்போது சோதனை முறையில் ஒளிபரப்பாகி வரும் மதிமுகம் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு வரும் 14ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர்  வைகோ  தொடங்கி வைக்கிறார்.
new telivision mathimugam
ம.தி.மு.க. கட்சி தொண்டர்களின் விருப்பதிற்கிணங்க அக்கட்சிக்கு புதிய டி.வி. தொடங்கப்படுவதாகவும்,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை நினைவுகூறும் வகையில் ‘மதிமுகம்’ என  பெயரிடப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
இதுபற்றி வைகோ: ம.தி.மு.க. தொடர்புடைய என்னுடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், மதிமுக மாநாடுகள், பொதுக்கூட்டம், விழாக்கள்  பற்றிய முழுமையான செய்திகள் வெளியிடப்படும். அதேபோல் எனது அறிக்கைகள் முழுமையாக ஒளிபரப்பப்படும்.
மற்ற பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் எனது செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.  ஆனால் மதிமுகம் தொலைக்காட்சியில் எனது செய்திகள் முழுமையாக வெளிவரும்.
இது கட்சி தொலைக்காட்சி இல்லை என்றும் மற்ற தொலைக்காட்சி போல் மதிமுகம் தொலைக்காட்சியில் மக்களை கவரக்கூடிய அனைத்துத் தரப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறும். நடுநிலையோடு செய்திகள் வெளிவரும் என்று கூறினார்.