கோவில்பட்டி: மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் 17ந்தேதிவரை வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்  ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டி விலை சுமார் 14ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி முதல்  ரூ. 2 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் விலை உயர்ரும் நிலை ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை 30% முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால்,  கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் மூலப்பொருட்களின் விலை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒருவாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் வருகிற 17-ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடி , உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் லைட்டரை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால், 6 லட்சம் ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், சுமார் 30 கோடி ரூபாய் இதனால் இழப்பீடு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த முடிவு!