கோவில்பட்டி: தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவயைன மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல் விலை ₹300ல் இருந்து ₹350 ஆக உயர்த்த கோவில்பட்டி யில் இன்று நடைபெற்ற  தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை தற்போது ரூ.2 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே  ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டி விலை சுமார் 14ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி முதல்  ரூ. 2 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் விலை உயர்ரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை  30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது தீப்பெட்டி பண்டல்கள் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.50 உயர்த்த கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே தீப்பெட்டி விலையை ரூ 2 ஆக உயர்த்தி உள்ள நிலையில் அதனை உயர்த்த முடியாது என்பதால் மூலப்பொருள்களின் விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் தீப்பெட்டி பண்டலுக்கு ரூ 50 உயர்த்த முடிவு செய்துள்ளனர். 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலுக்கு தற்பொழுது 300 ரூபாய் என விற்பனை செய்து வரும் நிலையில் ஏப்ரல் 1ந்தேதி முதல் மொத்த வியாபாரிகளுக்கு ரூ 350க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த விலை உயர்வினால் சற்று உயர்ந்து மூலப்பொருள்களின் விலைக்கு ஈடு கொடுக்க முடியும் என்று தீப்பெட்டி உற்பதியாளர்கள் கூறுகின்றனர்.

தீப்பெட்டி தொழிலை நம்பி நேரிடையாக மற்றும் மறைமுகமாக என சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழில் 90 சதவீதம் பெண்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.