விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  இன்று காலை திடீரென  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் அனுமதியின்றி பல பகுதிகளில் பட்டாசு தயாரிப்பும் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வப்போது வெடிவிபத்துக்களும், அதன்மூலம் பலர் உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சாத்தூர் அருகே உள்ள ஆப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த  சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று காலை  திடீரென  ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின. தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என மீட்புப்படையின் தேடிவருகின்றனர்.

விசாரணையில்,   பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருந்த அறையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்ததுள்ளது. அந்த சமயத்தில், அங்கு  பட்டாசு தயாரிப்பில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், அந்த அறைகளில் பணியாற்றிக்கொ ண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகின. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.