சென்னை: மா.கம்யூ கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை யாரும் நேரில் சென்று பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முதுபெரும் அரசியல் தலைவரும், மா.கம்யூ கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப்போராட்ட வீரருமான  என்.சங்கரய்யா  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ தமிழ்நாடு அரசு தகைசால் விருது வழங்கி ஏற்கனவே கவுரவித்த நிலையில், டாக்டர் பட்டம் வழங்கவும் முடிவு செய்தது.  சங்கரய்யாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,  இந்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தரான ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார்.

இநத் நிலையில்,  தோழர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால்  அப்பல்லோ ம மருத்துவமனையில் அ அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரை  கட்சியினர் யாரும் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து அவரை கவனித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள சங்கரய்யாவை, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்றுபார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.