மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார். அவருக்க வயது 74. வயது முதிர்வு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் கடந்த 2001 முதல் 2011 வரை இரண்டு முறை, மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றினார்.
நேற்று இரவு அவருக்கு திடீலென மூச்சுத் திணறல் ஏற்பட உடனே அவரது குடும்பத்தினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியிருக்க வீடு ஒதுக்குங்கள்! மதுரை ஆட்சியரிடம் மனுகொடுத்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்…