துரை

நேற்று முன் தினம் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு  தொடக்கியது

மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் காலை தொடங்கியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய 5 நாள் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியாக வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை, மத்தியக்குழு உறுப்பினர் வாசுகியிடம் இருந்து கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மாநாட்டு செங்கொடியை மேற்கு வங்க மூத்த தலைவர் பிமன் பாசு ஏற்றி வைத்தார்.

கூட்டத்துக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்கார் தலைமை தாங்கினார். கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, விடுதலை அமைப்பின் பொது செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவராஜன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.  கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நேற்று மதியத்துக்கு பிறகு பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாலை நடந்த கருத்தரங்கத்தில் சாலமன் பாப்பையா, திரை இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.  மேலும் வரலாற்று புகைப்படங்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இடதுசாரி தலைவர்கள் குறித்த கருத்தரங்கம், தியாகிககள் சுடர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன

மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.