புதுடெல்லி:

மாருதி, டாடா, ஹோண்டா, மகிந்திராவின் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள் விற்காமல் இருப்பதால், அந்நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.


இந்தியாவில் குறைவான உற்பத்தியும், நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்ததும் கார் தொழிலை பெரிதும் பாதித்துள்ளது.

கடந்த 7 மாதங்களாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் விற்பனை விழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜுன் ஆரம்பத்திலிருந்து ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள பயணிகள் வாகனங்கள் விற்பனையாகவில்லை.

ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
இதனால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளன.

மாருதி சுஜுகி, மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் கார் நிறுவனங்கள் கடந்த மாதமே உற்பத்தியை நிறுத்திவிட்டன.