புதுடெல்லி:

சாமானிய மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பதை முதன்மையாக கருத வேண்டும் என மத்திய அமைச்சரவை செயலாளர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.


வறுமை ஒழிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு அரசு தர வேண்டிய முக்கியத்துவம் குறித்து, மத்திய அமைச்சரவை செயலாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா,நிர்மலா சீதாராமன் மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசிடம் இருந்து இந்திய மக்களுக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.

நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த தேர்தலில் அரசுக்கு ஆதரவான அலை இருந்தது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகளே இதற்கு காரணம்.

சாமானிய மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பை முதன்மையாக கருத வேண்டும் என்றார்.