டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு மீண்டும் களத்தில் இறங்கும் ஹிங்கிஸ் தற்போது 3வது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடைபெற இருக்கும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.
இது அவரது ரசிகளிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் நடந்து வரும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் சான் யங் சானுடன் (சீனதைபே) இணைந்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான மார்ட்டினா ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ‘எனது டென்னிஸ் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இருந்ததை நம்ப முடியவில்லை. இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிங்கிஸ் இதுவரை 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (5 ஒற்றையர், 7 கலப்பு இரட்டையர், 13 பெண்கள் இரட்டையர்) கைப்பற்றி இருக்கிறார்.
இவர் ஏற்கனவே காயங்கள் காரணமாக 2003-ம் ஆண்டு தனது 22-வது வயதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
பின்னர் ஊக்க மருந்து பிரச்சினைகாரணமாக கடந்த 2006-ம் ஆண்டு விலகுவதாக அறிவித்து சில காலம் ஒதுஙகி இருந்தார்.
பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் களத்தில் இறங்கி தான் விட்ட இடத்தை பிடித்து முன்னேறினார்.
இந்நிலையில் தற்போது 3வது முறையாக ஓய்வுபெறுவதாக அறிவித்து உள்ளார்.