சென்னை,

மிழக சினிமாவில் தற்போது பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருவது ஜெய்-அஞ்சலி காதல் விவகாரம்தான்….

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின்மூலம் இணைந்த ஜெய், அஞ்சலி ஜோடி மேலும் ஒரு சில படங்களில் இணைந்து நடத்து வந்தது.

இந்த ஜோடிக்கு கெமிஸ்டிரி நன்றாக ஒர்க்அவுட் ஆவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இடையில் சில காலம் அஞ்சலி டைரக்டர் களஞ்சியம் காரணமாக ஓதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் கோலிவுட்டில் வலம்வர தொடங்கி உள்ளார். அதைத்தொடர்ந்து பலூன் என்ற படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வந்த, சர்வதே பெண்கள் தினத்தன்று, தான்  அஞ்சலியை தான் மிகவும் மிஸ் பண்ணுவதாக ஜெய் கூறியிருந்தார்.

ஆனால், இதுகுறித்து, சித்ரங்கதா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி  கலந்துகொண்ட போது,  ஜெய்யின் காதல் டுவீட் பற்றி கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், நான் மிக பிசியாக உள்ளேன். ஐந்து படங்கள் கையில் உள்ளது. திருமணம் குறித்த பேச்சுகள் இப்போது இல்லை என அஞ்சலி பேசினார்.

இதன் காரணமாக இவர்களின் காதல் கல்யாணத்தில் முடியாது என கிசுகிசுக்கப்படுகிறது…