டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் திருமண தடை சட்ட திருத்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில்,  பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்து. இதுகுறித்து நிலைக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நிலையில் எதிர்க்கட்சிகளின் குரல் எழுப்பினர். இது தொடர்பாக கடுமைன எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து  இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைப்பட்டது.

இந்த மசோதாவின்படி, தற்போதைய சட்டவிதிகளின்படி பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு, பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்ய ஜெயாஜேட்லி தலைமையில் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப் பட்டது. இந்த குழு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பெண்களுக்கான திருமண வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவை பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது,  “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் திருமண வயதில் பாலின சமத்துவம் இல்லாமல் இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதா மூலம் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் பாலின சமத்துவம் உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.  “மசோதாவின் நகல் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படவில்லை. அவசர கதியில் பணியாற்றும்போது தவறுகள் ஏற்படும். புதிய மசோதா குறித்து யாருடனும் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டறியவில்லை. இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப அமைச்சர் ஸ்மிருதி இரானி அவைத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதன்படி மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.