சீனாவின் ஒப்போ மற்றும் க்சிஓமி ஆகிய மொபைல் போன் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மொபைல் மற்றும் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமன்றி மொபைல் போன் விநியோகம் செய்யும் மேலும் சில சீன நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ஒப்போ, க்சிஓமி, ரைசிங் ஸ்டார் மற்றும் டிக்சன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன் பிளஸ், ஒப்போ, க்சிஓமி ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான
டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.