டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி  தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெறும் என்றும். மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்தியஅரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், நாளை முடிவடைய வேண்டிய நாடாளுமன்ற பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைதாக அறிவித்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெற்று முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது எம்.பி.க்கள் முன்னெடுத்துப் பேசிய பிரச்சனைகள் குறித்து விவாதித்ததுடன், தேசிய பிரச்னைகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்களிடம் கொண்டு செல்லுமாறும் எம்.பி.க்களை சோனியா  காந்தி கேட்டுக் கொண்டார்.