
பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் சதமடித்தார். மொத்தம் 204 பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களை அடித்து அவுட்டானார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கியுள்ள தமிழ்நாடு வீரர் நடராஜன், மார்னஸ் லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜன் பந்தில், ஷர்துல் தாகுரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தற்போது, கேமரான் கிரீன் 20 ரன்களிலும், டிம் பெய்னே 27 ரன்களிலும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல் மற்றும் சுந்தர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
[youtube-feed feed=1]