நியூயார்க்

முகநூலில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி முகநூல் அதிபர் மார்க் ஜுகர்பெர்க்கிடம் நாளை அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் அமெரிக்க அதிபர் தேர்த நடந்தது.   இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்,   அவருடைய வெற்றிக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முகநூல் பயனாளிகளில் விவரங்களை திருடியதாக புகார் எழுந்தது.   அதை முகநூல் நிறுவனரும் அதிபருமான மார்க் ஜுகர்பெர்க் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார்.

இது குறித்து அமெரிக்க பாராளுமன்றம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.   இந்தக் குழுப் பிரதிநிதிகளிடம் மார்க் ஏற்கனவே விவரங்கள் திருடப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அதை ஒட்டி நாளை அவரை விசாரணைக்கு வருமாறு குழு அழைத்துள்ளது.   நாளை அவர் விசாரிக்கப்படுவார் என அந்தக் குழு அறிவித்துள்ளது.