லிஃபோர்னியா

முகநூல் எனக் கூறப்படும் ஃபேஸ்புக் நிறுவன பெயரை மாற்றி ரி  பிராண்டிங் செய்ய அதன் சி இ ஓ மார்க் சுகர்பெர்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

உலகெங்கும் பல  மக்களின் ஆதரவு பெற்ற முகநூல் எனக் கூறப்படும் ஃபேஸ்புக் நிறுவனம் ச்மீப காலமாக பல சிக்கல்களில் சிக்கி வருகின்றது.   இந்த நிறுவத்தின் துணை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவை இந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் கடும் சிக்கல்களை எதிர் நோக்கி வருகிறது.   இதனால் நிறுவனம் கடும் கண்டனத்தைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்ற நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மார்க் சுகர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.    இந்த புதிய பெயரில் இனி  ஃபேஸ்புக் ரிபிராண்டிங் செய்யப்பட உள்ளதாகத் தகவலில் சொல்லப்பட்டுள்ளது.   இனி ஒரே மொபைல் செயலில்  முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெர்ஜ் என்னும் பத்திரிகை வரும் அக்டோபர் 28 அன்று நடைபெற உள்ள முகநூல் வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் மார்க் இது குறித்து அறிவிக்கலாம் எனக் கூறப்படுவதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.   மற்றொரு தகவலில் அடுத்த வாரத்திலேயே முகநூல் நிறுவனம் தனது புதிய பெயர் குறித்த விவாங்களை வெளியிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனம் இது குறித்து எவ்வித தகவலும் வெளியிட மறுத்துள்ளது.