மெரினாவில் இன்னொரு தாமிரபரணி கொடூரம் நடந்துவிடக்கூடாது!

Must read

“மெரினா கடற்கரையோரம் போராட்டக்காரர்கள் ஐநூறு பேர் திரண்டிருக்கிறார்கள். தாமிரபரணியில் நடந்ததுபோன்ற கொடூர சம்பவம் இங்கு நடந்துவிடக்கூடாது” என்பதுதான் நமது  பரிதவிப்பு.

அதென்ன தாமிரபரணி கொடூரம்?

மறந்துவிட்டவர்களுக்காக ஒரு நினைவூட்டர்

அது.. 1999ம் வருடம் ஜூலை 23ம் தேதி நடந்த சம்பவம் அது.

அதற்கு முன் அதன் பின்னணியை தெரிந்துகொள்வோம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிளார்களுக்கு அப்போது ஒரு நாளைக்கு எழுபது முதல். நூறு ரூபாய் வரையே தரப்பட்டது. கூலி உயர்வு உள்ளிட்ட வேறு சில கோரிக்கை்களுக்காக போராடிய தொழிலாளிரகள் 600 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.

 

 

அன்று தாமிரபரணி

தங்களது கோரிக்கைகளை லியுறுத்தியும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க தொழிலாளிகள் பேரணியாக புறப்பட்டனர். இடதுசாரி கட்சிகள், புதிய தமிழகம், தமாகா ஆகிய கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன. பு.த. கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி  தலைமையில் பேரணி புறப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியை அனுமதிக்க மறுத்த காவல்துறை.  குறிப்பிட்ட சிலர் வந்து மனு தரலாம் என்றது.

இதை போராட்டக்காரர்கள் (ஊர்வலத்தினர்)  மறுத்தனர்.  வாக்குவாதம். தள்ளுமுள்ளு ஆனது.  ஒரு கட்டத்தில். தடியடி பிரயோகம் நடத்தியது காவல்துறை.

கூட்டம் பயந்து சிதறி ஓடியது. அந்த சாலையின்

ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். மறு புறம் தாமிரபரணி ஆறு.

பெருவாரியான தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றனர். இவர்களில் 17 பேர் மரணமடைந்தனர். பலியானவர்களில்   ஒன்றரை  வயது விக்னேஷ்  என்ற குழந்தையும் அடக்கம்.

மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் செய்தியாளர்கள் என்று  500 பேருக்கும் மேல் காயமடைந்தார்கள்.

தற்போது மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக சி போராடிய இளைஞர்கள் பெரும்பாலோர் கலைந்து சென்றுவிட்ட நிலையில் இன்னும் சில இளைஞர்கள்.. சுமார் ஐநூறு பேர்… போராடிவருகிறார்கள். இது  தாமிரபரணியை நினைவுபடுத்தி பதைபதைக்க வைக்கிறது.

ஒருபுறம் கடல். மறுபுறம் கடற்கரைச்சாலை. அங்கே காவல்துறையினர்.

கடற்கரையோரம் போராட்டம் நடத்தும் இளைஞர்களை, போராட்டத்தைக் கைவிட்டு கலையுறுமாறு போலீசார் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தபடியே இருக்கிறார்கள்.  அவர்கள் மறுத்து கடலில் இறங்கி நிற்கிறார்கள்.

இன்னெரு பக்கம்.. மெரினா நோக்கி வரும் இளைஞர்களை திருவல்லிக்கோணி, ராயப்பேட்டை பகுதிகளில் தடியடி நடத்தி விரட்டி வருகிறது காவல்துறை.

இன்று மெரினா

இதே பலப்பிரயோகத்தை கடற்கரையில் நிற்பவர் மீது காவல்துறை காண்பித்துவிடக்கூடாது.

தற்போது கடற்கரையில் நிற்கும் மாணர்களில் பலர் கடலில் இறங்கி நிற்கிறார்கள் அவர்களை விரட்ட முயன்று அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாது. காவல் துறையினர்  இன்னமும் பொறுமை காத்து அவர்களை கலையச்செய்வதே நல்லது.

இன்னொரு விசயமும் நினைவுக்கு வருகிறது.

தற்போது சென்னை காவல்துறை ஆணையராக இருக்கும் டிகே ராஜேந்திரன்தான், தாமிரபரணி பலி நடந்தபோது திருநெல்வேலி பகுதி டிஐஜி ஆக இருந்தார்.

More articles

11 COMMENTS

Latest article